Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம்கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம்கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம்கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம்கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

ADDED : மார் 13, 2025 01:51 AM


Google News
தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம்கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த உலகில் அவதாரம் செய்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில், முதல்கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்து விட்டு, இரண்டாம் கால பூஜைக்காக, தீர்த்தகிரி மலை மீது, அம்பு எய்தி தீர்த்தம் உண்டாக்கி, அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜையை முடித்தார் என்பது இறை நம்பிக்கை. அந்த தீர்த்தமே, ராமர் தீர்த்தம் என்கிற புண்ணிய தீர்த்தமாகும். இந்த மலையும் தீர்த்தகிரி மலை என்று அழைக்கப்படும் புண்ணிய மலையாகும். ராமர், பார்வதிதேவி, குமர கடவுள், அக்னி தேவன், அகத்திய முனிவர் ஆகியோர், தவம் செய்து பாவ விமோச்சனம் பெற்ற தலம். அருணகிரிநாத சுவாமிகளால், திருப்புகழ் அருளிய ஒரே திருத்தலம் தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும்.

இதன் மாசிமக தேரோட்ட விழாவையொட்டி, நேற்று, முன்தினம் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று, தீர்த்தகிரீஸ்வரர் உடனுறை வடிவாம்பிகைக்கு பூஜையும், பின், முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று, சுவாமி திருவீதி உலாவும், நாளை, குத்துவிளக்கு பூஜையும், சுவாமி திருக்கல்யாணமும் நடக்கவுள்ளது. விழாவின், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மார்ச், 18ல் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us