ADDED : மே 21, 2025 02:02 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், இண்டூர் நத்தஅள்ளி காளியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. தொடர்ந்து அக்னி திருநாள் நிகழ்ச்சியும், கும்ப பூஜையும் நடந்தது. பி.எஸ்., அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து தேர்பவனி வரும் அம்மன் உற்சவர் பல்லக்கில் விழாக்குழுவினர் எடுத்து சென்று கோவிலை வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.