/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்
ADDED : ஜூலை 07, 2024 05:51 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற, தகுதியான-வர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சாந்தி தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு கல்வி உதவித்-தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300, பிளஸ் 2 படித்தவர்க-ளுக்கு, 400, பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வழங்கப்பட்டு வருகி-றது. இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 600, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு, 750, பட்-டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல-கத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அலுவலகத்தில், தங்களது கல்வி சான்றிதழ்களை, 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். படித்து முடித்து ஓராண்டு முடிந்த மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பட்டியலின பிரிவினர், 45 வயதும் மற்றவர்கள், 40 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. உதவித்தொகை பெற முதல்மு-றையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையோர், தர்மபுரி மாவட்டத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.