/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ போலீஸ் ஸ்டேஷன் பணிகள்மாணவர்களுக்கு பயிற்சி போலீஸ் ஸ்டேஷன் பணிகள்மாணவர்களுக்கு பயிற்சி
போலீஸ் ஸ்டேஷன் பணிகள்மாணவர்களுக்கு பயிற்சி
போலீஸ் ஸ்டேஷன் பணிகள்மாணவர்களுக்கு பயிற்சி
போலீஸ் ஸ்டேஷன் பணிகள்மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 26, 2025 02:04 AM
போலீஸ் ஸ்டேஷன் பணிகள்மாணவர்களுக்கு பயிற்சி
அரூர்:அரூர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, நேற்று அரூர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., சக்திவேல் தலைமையில், பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம், போலீசார் எப்படி கனிவுடன் பேச வேண்டும், மனுவை எப்படி பெற வேண்டும். மனுவில் எப்படி எழுத வேண்டும், முதல் தகவல் அறிக்கை தருவதற்கு என்னென்ன தேவை மற்றும் கடந்தாண்டு, அமல்படுத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதில் போலீசார், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட இணை செயலாளர் சாவித்திரி வரவேற்றார். மாநில துணை தலைவர் முனிரத்தினம் பேசினார்.
இதில், கால வரன்முறை ஊதியம் வழங்க கோருதல், பணி சுமையை குறைக்க காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்துதல் மற்றும் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றிய நிர்வாகிகள் சரிதா, தங்கம், ஜெயந்தி, ஜோதிபாய் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.