/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு
ADDED : ஜூலை 05, 2024 11:55 PM
ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்-கல்லில் நீர்வரத்து நேற்று மாலை, வினாடிக்கு, 4,000 கன அடி-யாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், ஒகேனக்கல் காவிரி-யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதி-களில் பெய்து வரும் மழையால், கர்நாடகாவில் உள்ள அணைக-ளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை, கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 2,917 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 546 கனஅடி என இரு அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 3,463 கன அடியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாமையம், தேன்கனிக்-கோட்டை பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்-ளது. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 4,000 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது.இதனால் மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ் அதன் கிளை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் காவிரியாற்றின் அழகை கண்டு ரசித்து மகிழ்ந்-தனர்.