/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள் பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
பசுமைப்படை மூலம் மரக்கன்றுகள் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 03, 2024 08:01 AM
தர்மபுரி, : நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள், பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்-றுகள் நட்டு பாராமரித்து வருகின்றனர். இதனால் இப்பள்ளி பசுமை பள்ளியாக தேர்வு செய்யபட்டுள்ளது.
இது குறித்து, தலைமை ஆசிரியர் தங்கவேல் கூறியதாவது:
இப்பள்ளியில், 1,120 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசி-ரியர் சின்னசாமி தலைமையிலான பசுமைபடையில், 70 மாண-வர்கள் உள்ளனர். இங்கு தொடங்கப்பட்டுள்ள நர்சரியில், 20 வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பள்ளிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு இங்கிருந்து மரக்கன்றுகள் வழங்கு-கிறோம். கடந்த, 2023ல் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்து, அதற்காக ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்-கப்பட்டது. தொடர்ந்து அண்ணா தலைமைத்துவ விருது, சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருதை அமைச்சர் மகேஷ் வழங்-கினார். மேலும், 10 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்-டது. இந்தாண்டு பசுமை பள்ளியாக தேர்வு செய்து, விருது வழங்கி, 20 லட்சம் ரூபாய் பசுமை பணிக்காக வழங்கப்பட்டுள்-ளது.
இப்பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு முதல்வர் திறனறி தேர்வு, தமிழ் இலக்கிய தேர்வு மற்றும் என்.எம்.எஸ்., தேர்வில், தலா இருவர், ஊரக திறனாய்வு தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வில், 2020ல் இருவர், 2021ல் ஒருவர், 2023ல் இருவர், நடப்பாண்டில், 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.