/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் 2 நாளாக ஆய்வு உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் 2 நாளாக ஆய்வு
உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் 2 நாளாக ஆய்வு
உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் 2 நாளாக ஆய்வு
உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் 2 நாளாக ஆய்வு
ADDED : மார் 12, 2025 08:01 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் கடந்த, 9 அன்று இரவு தர்ம-புரி டவுன் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பாது-காப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது பஸ் ஸ்டாண்ட் கடைகளில், 42 ரூபாய் எம்.ஆர்.பி., கொண்ட கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை கலெக்டர் வாங்கியபோது, 45 ரூபாய் என விற்பனை செய்துள்ளனர். அங்குள்ள கடைகளில் தர-மற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து, நேற்று முன்தினம் கண்டித்துள்ளார். இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரி, ஓட்டல்களில் ஆய்வு செய்து அப-ராதம் விதித்து வருகின்றனர்.இதில், நேற்று முன்தினம், 10 கடைகளில் தரமற்ற பொருட்-களை பறிமுதல் செய்து, 15,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நேற்று, 2வது நாளாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், கந்தசாமி, அருண்குமார் ஆகியோர் உணவு பொருட்கள் விற்-பனை செய்த கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி உள்ளிட்டவை எதுவும் இல்லாமல் இருந்த, 50 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து, சோதனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த ஆய்வில் பெரும்பாலான கடைகளில் தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்கள் இதுநாள் வரை விற்பனை செய்யப்-பட்டு வந்தது, கடந்த, 2 நாள் ஆய்வில் தெரியவந்துள்ளது.