Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இந்தியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

இந்தியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

இந்தியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

இந்தியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

ADDED : மே 20, 2025 02:43 AM


Google News
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர்,- சேலம் சாலை கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இயங்கி வரும் இந்தியன் கல்வி நிறுவனத்திலுள்ள இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (ஐ.எம்.எஸ்) மாணவர்கள், அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

இதில், 10ம் வகுப்பில் மாணவி காவியா, 496 மதிப்பெண்ணும், மாணவி ஜெயஸ்ரீ, 494 மதிப்பெண்ணும், மாணவர் கிஷோர் பிரசாத், 492 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் தமிழில்-99 மதிப்பெண்களை, 4 பேரும், ஆங்கிலத்தில், 99 மதிப்பெண்களை, 5 பேரும் பெற்றுள்ளனர். மேலும், கணிதத்தில், 10 பேரும், அறிவியலில், 25 பேரும், சமூக அறிவியலில், 20 மாணவர்களும், 100க்கு, 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய, 145 மாணவர்களில், 490- மதிப்பெண்களுக்கு மேல், 6 பேரும், 480க்கு மேல், 25 பேரும், 470க்கு மேல், 36 பேரும், 450க்கு மேல், 55 பேரும், 400க்கு மேல், 90 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

‍மேலும், 11ம் வகுப்பில் மாணவர் சதீஷ், 584 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவர்களுக்கு, இந்தியன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பழனிவேல், செயலாளர் தமிழ் முருகன், பொருளாளர் அருள்மணி, பள்ளி முதல்வர் சுபாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us