/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 02:22 AM
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் மதலைமுத்து உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். வருவாய் கிராம ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியர்களுக்கு ஈமச்சடங்கு நிதியாக, 25,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.