Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வனத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம்விசாரணைக்கு சென்றவர் தற்கொலை முயற்சி

வனத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம்விசாரணைக்கு சென்றவர் தற்கொலை முயற்சி

வனத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம்விசாரணைக்கு சென்றவர் தற்கொலை முயற்சி

வனத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம்விசாரணைக்கு சென்றவர் தற்கொலை முயற்சி

ADDED : மார் 27, 2025 01:27 AM


Google News
வனத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம்விசாரணைக்கு சென்றவர் தற்கொலை முயற்சி

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, ஏமனுார் வனப்பகுதியில் கடந்த, 1ம் தேதி ஆண் யானையை கொன்று எரித்து, தந்தம் வெட்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய வனத்

துறைக்கு உத்தரவிட்டது. இதில் கொங்கரப்பட்டியை சேர்ந்த செந்தில், 30, தினேஷ் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இதில் வனப்பகுதிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, செந்தில் தப்பி விட்டதாக, வனத்துறையினர் தெரிவித்து, அவரை தேடி வருகின்றனர்.

அதேசமயம் தப்பிய செந்திலின் சித்தப்பாவான கொங்கரப்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி செல்வம், ௪௭; செல்வத்தின் இளையமகன் விஜயகுமார் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதில் விஜயகுமாரை கைது செய்த நிலையில், செல்வத்தை வனத்துறையினர் விடுவித்து விட்டனர். கஸ்டடி விசாரணையின்போது செல்வத்தை வனத்துறையினர் தாக்கியுள்ளனர். இதனால் மூச்சு விட சிரமப்பட்டு வந்தவர், நேற்று காலை தனது வீட்டருகே புளியமரத்தில் துாக்கு போட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. வனத்துறையினர் விசாரணைக்கு சென்று வந்தவர், தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us