/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக கூறியதால்சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக கூறியதால்சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம்
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக கூறியதால்சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம்
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக கூறியதால்சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம்
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக கூறியதால்சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : மார் 25, 2025 12:47 AM
தர்மபுரி:தொப்பையாறு அணை பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணையிலிருந்து, 5,330 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெரும் வகையில் கடந்த, 3ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், தொப்பையாறு அணை இடது புற பாசன கால்வாய், 27 கி.மீ., நீளம் கொண்டது. வெள்ளார், காடையாம்பட்டி கிராமங்களுக்கு மட்டும் கடந்த, 20 நாட்கள் பாசனத்திற்கு நீரை திறந்தனர்.
கடைமடையிலுள்ள விவசாயிகளுக்கு நீர் வரவில்லை. இதில், விரைவில் பாசனத்திற்கு நீர் வரும் எனக்கூறியதால், கதவுகள் இல்லாத இடங்களில் மண், கல் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கி, இரவு பகல் பாராமல் பணிகளை செய்து முடித்தோம்.
ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில், கிளை கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. ஒரு சில விவசாயிகள், கால்வாயை மூடி உழவு செய்து விட்டனர். மேலும், பாசன விவசாயிகள் சங்க தலைவர், கால்வாய்க்கு பணம் வரவில்லை என, கால்வாயை மூடி விட்டார். இதை சீரமைப்பதற்கு போதுமான நிதி எங்களிடம் இல்லை. கிளை கால்வாய்கள் பொதுப்பணித்துறை பதிவேட்டில் இல்லை. எனவே, பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டுமென, எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வேளாண் துறை அலுவலர்களின் பரிந்துரைப்படி, எள், கம்பு, ராகி, தட்டைப்பயிர் ஆகியவற்றை பயிரிட்ட, 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம். எனவே, பாசனத்திற்கு நீர் தருவதாக கூறி ஏமாற்றிய அதிகாரிகள் மற்றும் கிளை கால்வாய்களை சேதப்
படுத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு நீர் திறக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.கர்ப்பிணி வயிற்றில் இருந்த 2 சிசு இறப்பு