Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/'நீங்களும் மருத்துவராகலாம்': கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கருத்தரங்கம்

'நீங்களும் மருத்துவராகலாம்': கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கருத்தரங்கம்

'நீங்களும் மருத்துவராகலாம்': கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கருத்தரங்கம்

'நீங்களும் மருத்துவராகலாம்': கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கருத்தரங்கம்

ADDED : ஜூன் 07, 2024 12:20 AM


Google News
தர்மபுரி : மருத்துவராக வேண்டும் என்பது, ஒவ்வொரு மாணவன் மற்றும் அவர்களது பெற்றோர்களின் கனவாக இருக்கும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் அடுத்து எதிர்பார்ப்பது எங்கு எம்.பி.பி.எஸ்., சேர முடியும்? நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டதால், மருத்துவம் படிக்க முடியுமா என்ற குழப்பங்கள் இருக்கும்.

இவற்றிற்கு தீர்வாக, லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம் சென்னையில், 22 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் மாணவர்கள் மருத்துவ கல்வியை மேற்கொள்ள, லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன் நிறுவனம் வழிகாட்டி வருகிறது. இதுவரை 1,750 மருத்துவர்களை, வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகள் மூலமாக உருவாக்கி உள்ளது. லிம்ராவின் மற்றொரு நிறுவனமான லைம் பயிற்சி மையம், 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு எப்எம்ஜிஇ பயிற்சி அளித்து வருகிறது.

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க கட்டாயம் நீட் தேவையா? பிளஸ் 2 தேர்வில் எந்தெந்த பாடப் பிரிவுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும். எத்தனை ஆண்டுகள் மருத்துவம் பயில வேண்டும். வெளிநாட்டில் படித்த தமிழக மாணவர்கள், அரசு மருத்துவராக பணியற்றமுடியுமா.

இது போன்ற சந்தேகங்களுக்கு, லிம்ரா நிறுவனம் நடத்தும் இலவச கருத்தரங்கம் வரும் 8ம் தேதி (நாளை) காலை, 11:00 மணியளவில் கிருஷ்ணகிரியில் உள்ள ேஹாட்டல் ஆர்.கே.வி.,யிலும், மாலை, 4:30 மணிக்கு தர்மபுரியில் உள்ள ேஹாட்டல் அதியமான் பேலசிலும் நடைபெறவுள்ளது. மேலும் விபரம் பெற, -9445483333, 9445783333, 9976300300 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us