ADDED : மார் 26, 2025 05:07 AM
திட்டக்குடி : திட்டக்குடி அருகே குடும்ப பிரச்னையில் தொழிலாளியை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த பெருமுளை, புதுகாலனியை சேர்ந்தவர் சக்கரபாணி, 47; கூலித் தொழிலாளி. இவரது மகளை அதே பகுதியை அஜய் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமுதல் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த அஜயின் தம்பி கவுதம், 26, என்பவர், கத்தியால் சக்கரபாணியின் கழுத்தில் வெட்டினார். படுகாயமடைந்த அவர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து, கவுதமை கைது செய்தனர்.