ADDED : ஜூன் 21, 2025 11:54 PM
புவனகிரி: புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பிக்கு நல்லான்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய கீழ் புவனகிரியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் விஸ்வா,19; என்பரை பிடிக்க முயன்றனர்.
அப்போது, அவர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து விஸ்வாவை கைது செய்தனர்.