Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இளம்பெண் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்

இளம்பெண் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்

இளம்பெண் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்

இளம்பெண் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்

ADDED : செப் 02, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
கடலுார்; கடலுாரில் இளம் பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் முதுநகர் அடுத்த மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் தமிழரசி, 23; இவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேவா, 23; என்பவரை, மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழரசி, கடலுார், வெளிச்செம்மண்டலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் துாக்கு போட்டு இறந்தார்.

இதுகுறித்து தமிழரசியின் தம்பி குணபாலன் கொடுத்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை தமிழரசியின் சாவுக்கு அவரது கணவர் மற்றும் மாமியார் தான் காரணம். எனவே, அவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழரசியின் உறவினர்கள் கடலுார் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

டி.எஸ்.பி., ரூபன்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து தமிழரசியின் கணவர் தேவா, அவரது தாய் சுமதி, 45; ஆகியோரை புதுநகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் தமிழரசியின் சித்தப்பா சிவமணி, தன்னை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில், தேவா உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us