Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகளிர் உரிமை தொகை பெற, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு 

மகளிர் உரிமை தொகை பெற, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு 

மகளிர் உரிமை தொகை பெற, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு 

மகளிர் உரிமை தொகை பெற, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு 

ADDED : ஜூன் 04, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்; விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மகளிர் உரிமை தொகை பெற, ஆவணங்களுடன் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இதில், ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர். இந்த திட்டம் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த திட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த பெண்கள் 2ம் கட்டமாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.

அதில், கடந்த மே மாதம் 29ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர், வரும் 4ம் தேதி அந்தந்த ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்களில் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 4ம் தேதியான நேற்று, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு, மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பித்த நுாற்றுக்கும் மேற்பட்ட மகளிர், தகுந்த ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

ஆனால், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முகாம் ஏதும் நடைபெறவில்லை. இதில், அதிர்ச்சியடைந்த பெண்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, இது குறித்த தங்களுக்கு ஏதும் தகவல் வரவில்லை என கூறிவிட்டனர். அப்போது, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், மகளிர் உரிமை தொகை பெற வந்த பெண்கள் வேறு வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளிடம் கேட்போது, இதுசம்பந்தமாக இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் இதுசம்பந்தமாக பேசினோம். அரசிடம் இருந்து எந்தவித அறிக்கையும் இதுவரை வரவில்லை என கூறிவிட்டனர்.

மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான செய்தியை நம்பி ஆவணங்களுடன் மகளிர் வந்துள்ளனர். இதுசம்பந்தமாக அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us