/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடை கட்டுமானத்திற்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் சாவுகடை கட்டுமானத்திற்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் சாவு
கடை கட்டுமானத்திற்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் சாவு
கடை கட்டுமானத்திற்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் சாவு
கடை கட்டுமானத்திற்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் சாவு
ADDED : பிப் 06, 2024 06:03 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நகைக்கடை கட்டுமானத்திற்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநற்குன்றத்தை சேர்ந்தவர் குபேந்திரன் மனைவி அமிர்தவள்ளி, 38; இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் ஜவுளி வாங்க உறவினர்களுடன் வந்திருந்தார்.
அப்போது, ஜவுளி கடை அருகே புதிதாக கட்டப்படும் தனியார் நகை கடை கட்டடத்தில் இயற்கை உபாதைக்காக சென்றார். அந்த கட்டடத்தில் லிப்டு அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, அமிர்தவள்ளியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.