/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலெக்டர் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூன் 17, 2025 01:07 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, பெண் ஒருவர், கலெக்டர் எதிரில் வந்ததும், திடீரென பையில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்தால் பரபரப்பு நிலவியது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலுார் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த கதிர்காமன் மனைவி ரேவதி 45; என்பது தெரிந்தது. கதிர்காமன் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டு முன் இறந்தார்.
ரேவதி கூலி வேலைக்கு சென்று, இரு பெண் குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால் அங்கன்வாடி மையத்தில் வேலை கேட்டு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக மீண்டும் வேலை கேட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. பின், போலீசார் மனுவை பெற்று கலெக்டரிடம் ஒப்படைத்தனர். ரேவதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.