ADDED : செப் 25, 2025 11:39 PM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பெட்டிக்கடையில், குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தில், பெட்டிக்கடையில் குட்கா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையை சோதனை செய்தனர்.
இதில், 70 குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து சேந்திரக்கிள்ளையைச் சேர்ந்த கடை உரிமையாளர் ராணியை, 69; கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.