/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.4.32 லட்சம் மோசடி; விருதை பெண் கைது ரூ.4.32 லட்சம் மோசடி; விருதை பெண் கைது
ரூ.4.32 லட்சம் மோசடி; விருதை பெண் கைது
ரூ.4.32 லட்சம் மோசடி; விருதை பெண் கைது
ரூ.4.32 லட்சம் மோசடி; விருதை பெண் கைது
ADDED : ஜூன் 14, 2025 11:32 PM

கடலுார் : விருத்தாசலம் அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 4.32 லட்சம் மோசடி செய்த பெண்ணை குற்றப்பிரிவுபோலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சதீஷ்,27; இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேகிராமத்தைச் சேர்ந்த ஹேமலதா,43, என்பவர் அறிமுகம் ஆனார். அப்பெண் அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், எம்.எல்.ஏ.,-எம்.பி.,அமைச்சர்கள் நன்கு அறிமுகமானவர்கள் எனக்கூறி சதீஷின் மனைவி தமிழ்ச்செல்விக்கு சத்துணவு பொறுப்பாளர் வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
இதை நம்பி சதீஷ், 6 தவணைகளில் 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை ஹேமலதாவிடம் கொடுத்தார். ஆனால், வேலை வாங்கித் தராமல் பணத்தை மோசடி செய்தார். பணத்தை திருப்பிக்கேட்டபோது, மிரட்டல் விடுத்தார்.
சதீஷ், மாவட்டகுற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து ஹேமலதாவை நேற்று முன்தினம் கைதுசெய்தனர்.