/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பராமரிப்பின்றி அம்மா பூங்கா வேப்பூரில் வீணாகும் அவலம் பராமரிப்பின்றி அம்மா பூங்கா வேப்பூரில் வீணாகும் அவலம்
பராமரிப்பின்றி அம்மா பூங்கா வேப்பூரில் வீணாகும் அவலம்
பராமரிப்பின்றி அம்மா பூங்கா வேப்பூரில் வீணாகும் அவலம்
பராமரிப்பின்றி அம்மா பூங்கா வேப்பூரில் வீணாகும் அவலம்
ADDED : செப் 13, 2025 07:24 AM

வேப்பூர் : வேப்பூரில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, பராமரிப்பில்லாததால் வீணாகிறது.
வேப்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியோர் நடைபயிற்சி மேற்கொள்ளும் விதமாக, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த 2017-18ம் ஆண்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிகூடம் அமைக்கப்பட்டன.
குழந்தைகள் பொழுது போக்கிற்காக விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டன. அம்மா பூங்காவை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.
இதனால், நடைப்பயிற்சி தளம் சேதமடைந்துள்ளதுடன், காலி மது பாட்டில்கள் ஆங்காங்கே உடைந்து சிதறிக் கிடக்கிறது. உடற்பயிற்சி சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். உபகரணங்கள் இன்றி பயிற்சி கூடம் காலியாக உள்ளது.
இதனால், பூங்கா பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.