/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு உயர்நிலைப் பள்ளி தரம் உயருமா? பண்ருட்டியில் மாணவிகள் எதிர்பார்ப்பு அரசு உயர்நிலைப் பள்ளி தரம் உயருமா? பண்ருட்டியில் மாணவிகள் எதிர்பார்ப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி தரம் உயருமா? பண்ருட்டியில் மாணவிகள் எதிர்பார்ப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி தரம் உயருமா? பண்ருட்டியில் மாணவிகள் எதிர்பார்ப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி தரம் உயருமா? பண்ருட்டியில் மாணவிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 02, 2025 11:52 PM
பண்ருட்டி: பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.
பண்ருட்டியில் திருவதிகை அரசு உயர்நிலைப்பள்ளி, அங்குசெட்டிப்பாளையம் உயர்நிலைப்பள்ளி, பூங்குணம் உயர்நிலைப்பள்ளி உள்ளனர். இங்கு படிக்கும் மாணவிகள் மேல்நிலைப்பள்ளி படிப்பிற்காக பண்ருட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியை நம்பியே இருந்தனர்.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவிகள் மேல்படிப்பு படிக்க முடியாமல் படிப்பை பாதியில் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்கள் மட்டும் படித்து வந்த பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இருபாலரும் கல்வி பயிலும் என, கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன்பேரில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இருபாலர் பள்ளியாக செயல்படுகிறது. இருபாலர் பள்ளியாக உள்ளதால் குறிப்பாக மாணவிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க தயங்கினர்.
இதையடுத்து பள்ளியின் வளாகத்தை கடந்த 2018ம் ஆண்டு இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில், ஒரு பகுதி பெண்கள் உயர்நிலைப்பள்ளியாகவும், மற்றொரு பகுதி அரசு மேல்நிலைப்பள்ளியாகவும் செயல்படுகின்றன.
இந்நிலையில் பெண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலையாக தரம் உயர்த்திட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் 2 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தனர். இதையடுத்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு சேர்க்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கல்வித்துறை சார்பில் எந்த அறிவிப்பும் இல்லாததால் மாணவிகள், பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.