/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தலைமை ஆசிரியர் பணியிடங்கள்... நிரப்பப்படுமா? : அரசு துவக்கப் பள்ளிகளில் எதிர்பார்ப்புதலைமை ஆசிரியர் பணியிடங்கள்... நிரப்பப்படுமா? : அரசு துவக்கப் பள்ளிகளில் எதிர்பார்ப்பு
தலைமை ஆசிரியர் பணியிடங்கள்... நிரப்பப்படுமா? : அரசு துவக்கப் பள்ளிகளில் எதிர்பார்ப்பு
தலைமை ஆசிரியர் பணியிடங்கள்... நிரப்பப்படுமா? : அரசு துவக்கப் பள்ளிகளில் எதிர்பார்ப்பு
தலைமை ஆசிரியர் பணியிடங்கள்... நிரப்பப்படுமா? : அரசு துவக்கப் பள்ளிகளில் எதிர்பார்ப்பு
ADDED : செப் 01, 2025 11:57 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி அரசு சார்பில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடலுார் வருவாய் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 7 வட்டாரங்கள் உள்ளன. கடலுார் கல்வி மாவட்டத்தில் மட்டும் 624 துவக்கப் பள்ளிகள் உள்ளன. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 680 பள்ளிகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 5 முதல் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
துவக்கப் பள்ளிகளில் 100 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி என்பது சவால்கள் நிறைந்த பதவியாக உள்ளன. குழந்தைகள், பெற்றோர்களிடம் இருக்கும் நேரத்தை விட பள்ளியில் இருக்கும் நேரம்தான் அதிகம்.
அதனால் குறும்பு செய்யம் மாணவர்களை கண்காணிப்பது அவசியமாகிறது. பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்தால் எந்த பிரச்னையும் இல்லாமல் போய்விடலாம் என ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
அண்மையில் கடலுார் அடுத்த கீழ் அழிஞ்சிப்பட்டில் ஆரம்ப பள்ளியில் படித்த மாணவி இறந்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியில் இருந்திருந்தால் அந்த மரணம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு, கடந்த 4 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. கடலுார் வட்டாரத்தில் திருமாணிக்குழி, வானமாதேவி, தொட்டி, கரைமேடு, சி.என்.பாளையம், இடையாளர்குப்பம், குமளங்குளம், வி.காட்டுப்பாளையம், கீரப்பாளையம், துாக்கணாம்பாக்கம், ஒதியடிக்குப்பம், ஜி.என்.குப்பம், தோட்டப்பட்டு ஆகிய பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அண்ணாகிராமம் வட்டாரத்தில் தொட்டி, சின்னபேட்டை, பாலுார், எம்.ஏரிப்பாளையம், கோழிப்பாக்கம், பனப்பாக்கம், பைத்தாம்பாடி, கட்டமுத்துப்பாளையம், ரெட்டிக்குப்பம் ஆகிய இடங்களி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
பண்ருட்டி வட்டாரத்தில் நத்தம், நன்னிக்குப்பம், சொரத்துார், வி.கண்டிகுப்பம், மேலிருப்பு, குடியிருப்பு, நடுநாட்டுப்பாளையம், பெரிய பிள்ளையார்குப்பம் ஆகிய இடங்களில் காலியாக உள்ளன.
ஒவ்வொரு வட்டாரத்திலும் 9 முதல் 13 பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி பார்த்தால் மாவட்டம் முழுவதிலும் 250க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளன.
கடந்த ஜூலை மாதம் நடந்த கலந்தாய்விலும் ஆசிரியர்கள் யாரும் தலைமை ஆசிரியர் பதவிக்கு செல்ல விரும்பவில்லை. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடம் தொடர்ந்து காலியாக உள்ளன. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால்தான் கல்வித்தரம் உயரும் என்பதில் சந்தேகமில்லை.