/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படுமா? இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த கோரிக்கை கடலுாரில் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படுமா? இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த கோரிக்கை
கடலுாரில் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படுமா? இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த கோரிக்கை
கடலுாரில் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படுமா? இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த கோரிக்கை
கடலுாரில் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படுமா? இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2025 07:59 PM
கடலுார்; கடலுார் மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் நீர் விளையாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் சில்வர் பீச், ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். கடந்த 2021ம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திறன்மிகு இடங்ளை கண்டறிந்து நீர் சறுக்கு, பாய்மர படகு போட்டி போன்ற நீர் விளையாட்டுகளில் இளைஞர்களுக்கு ஆர்வத்தை உருவாக்க நீர் விளையாட்டு மையங்கள் அமைக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீர் விளையாட்டு மையங்கள் அமைப்பதன் மூலம், பல்வேறு வெளிநாட்டினரும் வருகைபுரியும் வாய்ப்பு உருவாகும் என்பதால் சுற்றுலாவும் மேம்படும் என்ற நோக்கத்தில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ராமேஸ்வரம், துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 15கடற்கரைகளிலும் இதுபோன்ற செயல்பாடுகள் துவங்க திட்டமிடப்பட்டது. புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு அருகில், நீர் விளையாட்டு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. நீண்ட ஆய்வுக்குப்பின்னர் ராமநாதபுரம் அருகே அரியமான், பிரப்பன்வலசை கடற்கரைகள் அருகே 42கோடி ரூபாய் மதிப்பில் ஆறு ஏக்கரில் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
அதேபோல், கடலுாரிலிருந்து சிதம்பரம் வரை உள்ள கடற்கரையோர பகுதியில் நீர் விளையாட்டு மையம் அமைப்பதற்கு தகுதியான இடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பின் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அண்மையில் கடலுார் சில்வர் பீச்சில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் உள் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அருகிலேயே ஒரு இடத்தை தேர்வு செய்து நீர் விளையாட்டு மையம் அமைத்தால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு உதவியாக இருக்கும். நீர் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக கடலுார் பகுதியில் நீர் விளையாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.