ADDED : செப் 20, 2025 11:54 PM
குறிஞ்சிப்பாடி : மனைவி மாயமானது குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்தார்
குறிஞ்சிப்பாடி, ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர்,32; இவரது மனைவி தேன்மொழி, 26; கடந்த, 14ம் தேதி வீட்டில் இருந்த தேன்மொழி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.