ADDED : செப் 05, 2025 03:19 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவி லில் மிலாது நபி முன்னிட்டு தெற்கு மாவட்ட காங்., சார்பில் எள்ளேரி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிர்வாகி ஜோதிமணி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் நஜீர் அகமது, உணவு வழங்கினார். விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன், முன்னாள் நகர தலைவர் நியமத்துல்லா, செல்லதுரை பங்கேற்றனர்.
வட்டார தலைவர் பகத்சிங் நன்றி கூறினார்.