/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறந்த உட்கோட்டமாக விருத்தாசலம் தேர்வு: டி.எஸ்.பி.,க்கு எஸ்.பி., பாராட்டு சிறந்த உட்கோட்டமாக விருத்தாசலம் தேர்வு: டி.எஸ்.பி.,க்கு எஸ்.பி., பாராட்டு
சிறந்த உட்கோட்டமாக விருத்தாசலம் தேர்வு: டி.எஸ்.பி.,க்கு எஸ்.பி., பாராட்டு
சிறந்த உட்கோட்டமாக விருத்தாசலம் தேர்வு: டி.எஸ்.பி.,க்கு எஸ்.பி., பாராட்டு
சிறந்த உட்கோட்டமாக விருத்தாசலம் தேர்வு: டி.எஸ்.பி.,க்கு எஸ்.பி., பாராட்டு
ADDED : ஜூன் 20, 2025 12:46 AM

விருத்தாசலம்: மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கில் சிறந்த உட்கோட்டமாக விருத்தாசலம் தேர்வு செய்யப்பட்டதால், எஸ்.பி., ஜெயக்குமார், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மாவட்டத்தில் கடந்தவாரம் சனிக்கிழமை லோக் அதாலத் நடந்தது. அதேபோல், விருத்தாசலம் சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடந்தது.
இதில், விருத்தாசலம் உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் இருந்த 1,680 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதனால், மாவட்டத்தில் விருத்தாசலம் உட்கோட்டம் முதன்மை உட்கோட்டமாகவும், விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் மாவட்டத்தில் முதன்மை ஸ்டேஷனாகவும் தேர்வு பெற்றுள்ளது.
நடுத்தர போலீஸ் ஸ்டேஷன்கள் வகையில் மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் 318; பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷனில் 301; ஆலடி போலீஸ் ஸ்டேஷனில் 297 வழக்குகளுக்கு லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டு, மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
சிறந்த உட்கோட்டமாக தேர்வு செய்யப்பட்டதால், விருத்தாசலம் உட்கோட்ட டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனை, எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.