/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெய்வேலியில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சிநெய்வேலியில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெய்வேலியில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெய்வேலியில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெய்வேலியில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 11, 2024 10:48 PM

நெய்வேலி: நெய்வேலியில் இ.வி.எம். மற்றும் வி.வி., பேட் மெஷின்களின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நெய்வேலி நகரின் முக்கிய பகுதிகளான மெயின் பஜார்,சூப்பர் பஜார். புதுக்குப்பம் ரவுண்டானா போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வரஇருக்கும் லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டளிக்கும்போது கவனிக்க வேண்டிய மற்றும் அவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இ.வி.எம். மற்றும் வி.வி.,பேட் மெஷின்களின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
என்.எல்.சி., கல்வித்துறை மற்றும் விளையாட்டுத் துறை செயலாளர் பிரபாகரன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
ஓட்டளிப்பது எப்படி, ஓட்டு எப்படி பதிவாகிறது. இ.வி.எம். மற்றும் வி.வி., பேட் மெஷின்களின் மூலம் ஓட்டளிப்பது குறித்த செயல்விளக்கம் மற்றும் சந்தேங்களை விளக்கினர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், செல்வராஜ், கருப்பைா, ரவிச்சந்திரன், முருகேசன், நாராயணசாமி, பாலச்சந்தர், பிரதாபன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.