/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மூடப்பட்ட சுகாதார நிலையம் கிராம மக்கள் தவிப்புமூடப்பட்ட சுகாதார நிலையம் கிராம மக்கள் தவிப்பு
மூடப்பட்ட சுகாதார நிலையம் கிராம மக்கள் தவிப்பு
மூடப்பட்ட சுகாதார நிலையம் கிராம மக்கள் தவிப்பு
மூடப்பட்ட சுகாதார நிலையம் கிராம மக்கள் தவிப்பு
ADDED : ஜன 03, 2024 12:30 AM

பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் டேனிடா துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. இதன் மூலம் சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எவ்வித அறிவிப்புமின்றி சுகாதார நிலையம் பூட்டப்பட்டது. இதனால் சுகாதார நிலையம் முட்புதர்கள் மண்டி, கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன.
மேலும், இப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக 12 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கும், 13 கி.மீ., துாரமுள்ள பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டும்.
இதனால் காலவிரயம் ஏற்படுவதுடன் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே, ஓ.கீரனுாரில் பாழாகி வரும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.