ADDED : ஜன 28, 2024 05:26 AM

புவனகிரி, : புவனகிரிக்கு நாளை துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நாளை (29ம் தேதி) தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க, கடலுார் மாவட்டம், புவனகிரிக்கு வருகை தருகிறார். இதற்காக புவனகிரி எல்லையில் ஆதிவராகநல்லுார் ஊராட்சி மற்றும் புவனகிரி பேரூராட்சி சாலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, சேதமடைந்த சாலை பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலம் பேட்ச் ஒர்க் செய்து வருகின்றனர். சாலையின் இருபுறமும் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு பளீச் என காணப்படுகிறது.
துணை ஜனாதிபதி பங்கேற்க உள்ள தனியார் இடத்தில் நேற்று வெடிகுண்டு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.