ADDED : ஜன 06, 2024 06:36 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில், சிவசக்திவேல் தைபூச பழனி பாதயாத்திரை குழு சார்பில் வேலுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மந்தாரக்குப்பம் சிவசக்திவேல் தைபூச பழனி பாதயாத்திரை குழுவினர் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாதயாத்திரையில் கொண்டு செல்லப்படும் வேலுக்கு நேற்று சிறப்புபூஜை நடந்தது.
கடைவீதியில் உள்ள விநாயகர் கோவிலில் குருசாமி ராஜேந்திரன் தலைமையில் நடந்த பூஜையைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுப்ரமணியர் சுவாமியுடன் வீதியுலா நடந்தது.