/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முருகனுக்கு வேல் அபிேஷகம் நெய்வேலியில் சிறப்பு வழிபாடுமுருகனுக்கு வேல் அபிேஷகம் நெய்வேலியில் சிறப்பு வழிபாடு
முருகனுக்கு வேல் அபிேஷகம் நெய்வேலியில் சிறப்பு வழிபாடு
முருகனுக்கு வேல் அபிேஷகம் நெய்வேலியில் சிறப்பு வழிபாடு
முருகனுக்கு வேல் அபிேஷகம் நெய்வேலியில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 08, 2024 05:51 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி பழனி தண்டாயுதபாணி தைப்பூச பாதயாத்திரை குழுவினர் சார்பில் முருகனுக்கு வேல் அபிேஷகம், சிறப்பு வழிபாடு மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
நெய்வேலி பழனி தண்டாயுதபாணி தைப்பூச பாதயாத்திரை குழுவினர் 49 ம் ஆண்டு பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளனர். அதை தொடர்ந்து நெய்வேலி புவனேஸ்வரி அம்மன் கோவிலில்உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பால்குடம், மற்றும் காவடி ஊர் வலம் நடந்தது. ஊர்வலம் கடை வீதி வழியாக பெரியாக்குறிச்சி தனியார் மண்டபம் வரை சென்றடைந்தது.
அதை தொடர்ந்து பெரியாக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் முருகனுக்கு வேல் அபிேஷகம், மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. செல்வராஜ் குருசாமி தலைமையில் பக்தர்கள் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருசாமிகள் ராஜேந்திரன், வெங்கடேசன், செந் தில், நேரு, சுரேஷ், ராஜேந்திரபிரசாத், மணிகண்டன், மூர்த்தி, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.