/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி
தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி
தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி
தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி
ADDED : செப் 04, 2025 06:56 AM

பரங்கிப்பேட்டை :சவுடு மண் குவாரி குட்டையில், குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் திருமாவளவன் நிதி உதவி வழங்கினார்.
பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சியில் சவுடு மண் குவாரி குட்டையில் கடந்த 29ம் தேதி பு.முட்லூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுல்தான் மற்றும் இலியாஸ் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இறந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு நேற்று வி.சி.,கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.
அவருடன், மாவட்ட செயலாளர் தமிழ் ஒளி, முன்னாள் மாவட்ட செயலாளர் அறவாழி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.