/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா துவக்கம் அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
ADDED : மே 31, 2025 11:47 PM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காட்டுமன்னார்கோவிலில் உள்ள சவுந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும், வைகாசி விசாக விழாவில், தேர் திருவிழா பிரிசித்தி பெற்றதாகும்.
10 நாட்கள் நடக்கும் வைகாசி விகாக திருவிழாவில் முதல் நாளான நேற்று காலை சிறப்பு பூஜைகள் முடிந்து கொடியேற்றம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, துணை தலைவர் மணிமாறன், செயல் அலுவலர் செல்வமணி, கலைமகள் பள்ளி தாளாளர் முத்துக்குமரன், அறங்காவலர் குழு தலைவர் அறிவழகன், அறங்காவலர்குழு செந்தில்குமார், நெடுமாறன், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமும் இரவு பஞ்சமூர்த்திகள்வீதியுலா நடக்கிறது. வரும் 4ம் தேதி தெருவடைச்சான், 6ம் தேதி திருக்கல்யாணம், முக்கிய விழாவான தேர் திருவிழா8ம் தேதி நடக்கிறது.
9 ம் தேதி பல்லக்கில் வீதியுலா, தீர்த்தவாரியுடன்விழா நிறைவடைகிறது.