Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வேரோடு சாய்ந்த  புளியமரம் போக்குவரத்து பாதிப்பு 

 வேரோடு சாய்ந்த  புளியமரம் போக்குவரத்து பாதிப்பு 

 வேரோடு சாய்ந்த  புளியமரம் போக்குவரத்து பாதிப்பு 

 வேரோடு சாய்ந்த  புளியமரம் போக்குவரத்து பாதிப்பு 

ADDED : டிச 01, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி - தேவங்குடி சாலையில் புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதித்தது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கருவேப்பிலங்குறிச்சி - தேவங்குடி சாலை, தேவங்குடி பஸ் நிறுத்தம் அருகே இருந்த புளியமரம் நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் வேரோடு சாய்ந்து, சாலையின் குறுக்கே விழுந்தது.

தகவலறிந்து வந்த ஸ்ரீ முஷ்ணம் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், கருவேப்பிலங்குறிச்சி - தேவங்குடி சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us