/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அனுமதியின்றி பேனர், சாலை மறியல் பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் மீது வழக்குஅனுமதியின்றி பேனர், சாலை மறியல் பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
அனுமதியின்றி பேனர், சாலை மறியல் பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
அனுமதியின்றி பேனர், சாலை மறியல் பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
அனுமதியின்றி பேனர், சாலை மறியல் பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஜன 28, 2024 05:03 AM
புவனகிரி : புவனகிரியில் அனுமதியினறி பேனர் வைத்த பா.ஜ.,வினர் மற்றும் கீழ்புவனகிரியில் சாலை மறியல் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் உட்பட 22 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புவனகிரியில் கடந்த 25ம் தேதி 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அதனையொட்டி, புவனகிரி பகுதியில் கட்சியினர் போலீஸ் அனுமதியின்றி பேனர் வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி வி.ஏ.ஓ., வத்சலா அளித்த புகாரின் பேரில் பா.ஜ., மாவட்ட செயலாளர் திருமாவளவன், துணைத் தலைவர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகி சந்தோஷ்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
மேலும், கீழ்புவனகிரி பஸ் நிறுத்தம் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க,. கவுன்சிலர் ஜெயப்பிரியா உட்பட 19 பேர் மீதும் வழக்குப் பதிந்தனர்.