/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருநங்கை கொலை வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்' திருநங்கை கொலை வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'
திருநங்கை கொலை வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'
திருநங்கை கொலை வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'
திருநங்கை கொலை வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : மார் 23, 2025 06:20 AM

கடலுார் : திருநங்கை கொலை வழக்கில் விருத்தாசலத்தை சேர்ந்த 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அடுத்த சுக்கம்பார் கிராமத்தை சேர்ந்தவர் யூஜின் வில்லியம் ஜோசப்,31; திருநங்கையாக மாறிய இவர், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள அரசு காப்புக்காட்டில் முன்விரோதம் காரணமாக கடந்த 18ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார்.
கருவேப்பலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் சந்திரசேகர் (எ) அம்முசேகர்,38; சிறுவரப்பூர் சிவபெருமாள்,38; மற்றும் மூன்று திருநங்கைகள் உட்பட 7 பேரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். சந்திரசேகர் (எ) அம்முசேகர் மீது விருதாச்சலம் போலீசில் ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது.
இந்நிலையில், அம்முசேகர், சிவபெருமாள் ஆகியோரின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். அதையடுத்து, கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.