/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருத்தாசலம் மருத்துவமனையில் இரு அமைச்சர்கள் ஆய்வுவிருத்தாசலம் மருத்துவமனையில் இரு அமைச்சர்கள் ஆய்வு
விருத்தாசலம் மருத்துவமனையில் இரு அமைச்சர்கள் ஆய்வு
விருத்தாசலம் மருத்துவமனையில் இரு அமைச்சர்கள் ஆய்வு
விருத்தாசலம் மருத்துவமனையில் இரு அமைச்சர்கள் ஆய்வு
ADDED : ஜன 31, 2024 02:17 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், கணேசன் நேற்று ஆய்வு செய்தனர்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை வந்த அமைச்சர் சுப்பிரமணியன், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
டயாலிசிஸ் பிரிவை பார்வையிட்டு, எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என ஆய்வு செய்தார்.
அப்போது, அமைச்சரிடம் தொடர் சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள், கூடுதலாக 15 டாக்டர்கள், 15 செவிலியர்கள், 16 செவிலியர் உதவியாளர்களை, மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என, தலைமை மருத்துவ அலுவலர் சுவாமிநாதன் கோரிக்கை மனு அளித்தார்.
விருத்தாசலம் நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை செய்து தர வேண்டும், அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வும் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் கனக கோவிந்தசாமி, வேல்முருகன், ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல், காங்., கட்சி நகர தலைவர் ரஞ்சித்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.