/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொத்தனார் கொலை வழக்கு பண்ருட்டியில் 2 பேர் கைது: மொபைல் உடைத்ததால் தீர்த்து கட்டியது அம்பலம் கொத்தனார் கொலை வழக்கு பண்ருட்டியில் 2 பேர் கைது: மொபைல் உடைத்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
கொத்தனார் கொலை வழக்கு பண்ருட்டியில் 2 பேர் கைது: மொபைல் உடைத்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
கொத்தனார் கொலை வழக்கு பண்ருட்டியில் 2 பேர் கைது: மொபைல் உடைத்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
கொத்தனார் கொலை வழக்கு பண்ருட்டியில் 2 பேர் கைது: மொபைல் உடைத்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
ADDED : செப் 22, 2025 02:48 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கொத்தனார் கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கட்டியாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் கார்த்திக்,30; கொத்தனார்; இவர், கடந்த 16ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் தென்குமார், 30; மணிகண்டன்,32; ஆகியோருடன் மது அருந்து சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
18ம் தேதி உடலில் வெட்டு காயங்களுடன் அதே பகுதியில் உள்ள குட்டையில் கார்த்திக் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர். எஸ்.பி.ஜெயக்குமார், டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் அசோகன் விசாரணை நடத்தியதில், கார்த்திக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
போலீசார் சந்தேகத்தின் பேரில், விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் பதுங்கியிருந்த மணிகண்டன், தென்குமார் ஆகியோரை நேற்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில்,கட்டட வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வதில் மணிகண்டன், கார்த்திக் இடையே முன்விரோதம் உள்ளது. கடந்த 16ம் தேதி 3 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.
தென்குமாரின் மொபைல் போனில் கார்த்திக் யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மொபைல் கீழே விழுந்து சேதமானதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தென்குமாருக்கு ஆதரவாக மணிகண்டன் பேசினார்.
தொடர்ந்து, அவர்கள், வைத்திருந்த கொளூரால் கார்த்திக்கை வெட்டி கொலை செய்தனர். கொலையை மறைக்க உடலில் கல்லை கட்டி குட்டையில் வீசிச் சென்றதை ஒப்புக் கொண்டனர். உடன், 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.