ADDED : ஜன 05, 2024 06:28 AM
காட்டுமன்னார் கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே குட்கா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
காட்டுமன்னார்கோவில் குட்கா விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, பெட்டி கடை களில் குட்கா விற்ற விளத்துார் கிராமத்தை சேர்ந்த அழகேசன்,45; வீராணநல்லுார் சுக்லா,40; ஆகியோரை கைது செய்தனர்.