ADDED : பிப் 24, 2024 06:44 AM
திருபுவனை : திருபுவனை அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை திருவண்டார்கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பைக்குடன் நின்ற இரு வாலிபர்கள், பைக்கில் தப்பிச் செல்ல முயன்றனர்.
அவர்களை மடக்கி சோதனை செய்ததில், 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், திருவாண்டார்கோவில் வாய்க்கால் மேட்டு தெரு கண்ணாயிரம் மகன் செந்தில்குமார், 30; விழுப்புரம் மாவட்டம் கோலியனுார் கால்நடை மருத்துவமனை தெரு செல்வராஜ் மகன் சூரியன், 24, என்பதும், இருவரும் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த கஞ்சா, பைக் மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.