ADDED : ஜூன் 06, 2025 07:59 AM

ஸ்ரீமுஷ்ணம், ; ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.
தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். தாசில்தார் இளஞ்சூரியன் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் தின விழா விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கடைவீதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.