/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திறன் பயிற்சி பெற திருநங்கைகள் அழைப்பு திறன் பயிற்சி பெற திருநங்கைகள் அழைப்பு
திறன் பயிற்சி பெற திருநங்கைகள் அழைப்பு
திறன் பயிற்சி பெற திருநங்கைகள் அழைப்பு
திறன் பயிற்சி பெற திருநங்கைகள் அழைப்பு
ADDED : ஜூன் 02, 2025 12:09 AM
கடலுார்: திறன் பயிற்சி பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளையும் சமுதாயத்தில் ஓர் அங்கமாக ஏற்று நலத்திட்டங்களை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் சமூகத்தில் சுயகவுரவத்தோடும், தன்னம்பிக்கையோடும் சுயதொழில் செய்து வாழ்வை மேம்படுத்த சமூக நலத் துறையின் மூலம் திறன் பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு மானியம்வழங்க பரிந்துரைக்கப்படும்.
எனவே திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக விரைவில் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.