ADDED : ஜன 11, 2024 04:25 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டி நடந்தது.
மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் மலர் தலைமை தாங்கினார்.
திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, பி.டி.ஓ., சீனிவாசன், துணை பி.டி.ஓ., சீதாபதி, சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் முன்னிலை வகித்தனர்.
வட்டார இயக்க மேலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
உணவு திருவிழாவில், ஒவ்வொரு ஒன்றியங்களிலும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுகளை தயார் செய்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
மண்டல உதவி திட்ட அலுவலர்கள் முத்துபாண்டியன், சிவா ஆகியோர் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் லதா, மீனாட்சி, தேவி, செல்வி, பொன்மலர், அனிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.