/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்பாடு பணிகள் ... மந்தம்: விரைந்து முடிக்க அதிகாரிகள் கண்காணிப்பு தேவைதிருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்பாடு பணிகள் ... மந்தம்: விரைந்து முடிக்க அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்பாடு பணிகள் ... மந்தம்: விரைந்து முடிக்க அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்பாடு பணிகள் ... மந்தம்: விரைந்து முடிக்க அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்பாடு பணிகள் ... மந்தம்: விரைந்து முடிக்க அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
ADDED : செப் 18, 2025 03:36 AM

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் ரூ. 6.38 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் மந்த நிலையில் நடந்து வருவதால் ரயில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலுார் ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம், திண்டிவனம், சென்னை, திருப்பதி, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும், மறுமார்க்கத்தில் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்செந்துார், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக் கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடலுாரில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரெயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. கழிவறை வசதி இருந்தும் மக்களுக்கு பயன்படாமல் பூட்டியே கிடக்கிறது. ஒரு குழாயி ல் மட்டும் குடிநீர் வருகிறது. மற்ற குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. பயணிகள் தங்கும் அறை இருந்தும் அது திறக்கப் படாமல் பூட்டியே உள்ளது.
இது தவிர வாகன நிறுத்துமிடமும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. 2-வது நடைமேடையில் பாதி துாரம் மேற்கூரை அமைக்கப்படாமல் திறந்த வெளியாக உள்ளது. நுழைவு வாயிலில் சாலை வசதியின்றி குண்டும், குழி யுமாக காணப்படுகிறது.
இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த ரயில் நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் அம்ரூத் பாரத் திட்டத்தில் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது. திருச்சி கோட்டத்தில் சிதம்பரம், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட 15 ரெயில் நிலையங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த 6 கோடியே 38 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த நிதியில் இருந்து கடந்த 2023-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. அதில் புதிய டிக்கெட் கவுண்டர், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன கழிவறை வசதிகள், குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறை, வாகன நிறுத்துமிடம், லிப்ட், பூங்கா, நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வந்தன.
அதில் லிப்ட் வசதி மட்டும் பணிகள் முடிந்து, பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மற்றபடி நுழைவு வாயில் அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. 2-வது நடைமேடையில் மேற்கூரை அமைக்கும் பணி இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டு, பணிகள் முடியாமல் எலும்பு கூடாக நிற்கிறது.
நுழைவு வாயில் முதல் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் வரை சாலை வசதி அமைக்கும் பணி தொடங்காமல் இருக் கிறது. கழிவறை வசதி அமைக்கும் பணியும் முழுமை பெறாமல் உள்ளது.
பூங்கா அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், எந்த வித பணிகளும் தொடங்கவில்லை. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலைய பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் ஒப்பந்ததார ரை கண்டித்துள்ளார். பணியை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்தும், ஏன் பணிகளை முடிக்க வில்லை என்று எச்சரித்தார். ஆனாலும் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடக் கிறது. கடந்த சில வாரங்களாக அங்கு எந்த பணிகளும் நடக்கவில்லை. ஆகவே திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் இதை கண்காணித்து பணிகளை துரிதப்படுத்தி முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் பெ ரிதும் எதிர்பார்த்துள்ளனர்