/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு காரை விதிமீறி பயன்படுத்திய திட்டக்குடி நகராட்சி தி.மு.க., சேர்மன் நடவடிக்கைக்கு முயன்ற கமிஷனரை கண்டித்து தர்ணா அரசு காரை விதிமீறி பயன்படுத்திய திட்டக்குடி நகராட்சி தி.மு.க., சேர்மன் நடவடிக்கைக்கு முயன்ற கமிஷனரை கண்டித்து தர்ணா
அரசு காரை விதிமீறி பயன்படுத்திய திட்டக்குடி நகராட்சி தி.மு.க., சேர்மன் நடவடிக்கைக்கு முயன்ற கமிஷனரை கண்டித்து தர்ணா
அரசு காரை விதிமீறி பயன்படுத்திய திட்டக்குடி நகராட்சி தி.மு.க., சேர்மன் நடவடிக்கைக்கு முயன்ற கமிஷனரை கண்டித்து தர்ணா
அரசு காரை விதிமீறி பயன்படுத்திய திட்டக்குடி நகராட்சி தி.மு.க., சேர்மன் நடவடிக்கைக்கு முயன்ற கமிஷனரை கண்டித்து தர்ணா
ADDED : செப் 19, 2025 02:58 AM

திட்டக்குடி:அரசு வாகனத்தில் கரூர் தி.மு.க., விழாவிற்கு சென்ற நகராட்சி சேர்மன், அது குறித்து கமிஷனர் நடவடிக்கை எடுக்க முயன்றதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி தி.மு.க.,வைச் சேர்ந்த சேர்மன் வெண்ணிலா. இவர், நேற்று முன்தினம் கரூரில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவிற்கு அரசு காரில் சென்றார்.
பட்டியலினம்
காரை அலுவலகத்தில் பணிபுரியும் பதிவறை எழுத்தர் சிவசக்தி ஓட்டினார். இதையறிந்த நகராட்சி கமிஷனர் முரளிதரன், மேனேஜர் பார்த்திபன் ஆகியோர் அனுமதியின்றி நகராட்சி எல்லையை கடந்து காரை ஓட்டிச் சென்றதால், சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க விசாரித்தனர்.
இதை கண்டித்து, நேற்று காலை, நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து வெண்ணிலா தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக தி.மு.க., ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், கூட்டணி கட்சியினர் உடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் உள்ள நகராட்சிகளின் மண்டல இயக்குநர் லட்சுமி, 'செப்., 22ல் நானும், கலெக்டரும் நேரடியாக வந்து விசாரிக்கிறோம். போராட்டத்தை கைவிட வேண்டும்' என, வெண்ணிலாவிடம் பேசினார். பின், அவர் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
வெண்ணிலா கூறுகையில், ''நகராட்சி அதிகாரிகள் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. நானும், பதிவறை எழுத்தரும் பட்டியலினம் என்பதால் அதிகாரிகள் என்னை எந்த பணியும் செய்யவிடாமல் ஒதுக்குகின்றனர்,'' என்றார்.
அனுமதி பெற வேண்டும்
மேனேஜர் பார்த்திபன் கூறுகையில், ''சேர்மனுக்கு வழங்கப்பட்ட கார் நகராட்சி எல்லைக்குட்பட்ட 23 வார்டுகளில் ஆய்வு பணிக்கு தான் பயன்படுத்த வேண்டும். வெளியூர், வெளி மாவட்டம் செல்ல சொந்த வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.
'' கலெக்டர் அலுவலகம் செல்வதாக இருந்தாலும், நகராட்சி கமிஷனரிடம் அனுமதி பெற்று தான் அலுவலக காரை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.