ADDED : ஜன 03, 2024 12:40 AM
கடலுார் : கடலுாரில் திருப்பாதிரிப்புலியூர் சித்தாந்த சைவநெறி மன்றத்தின் வெள்ளி விழா துவக்க திருமுறை இன்னிசை விழா நடந்தது.
சங்கர் தலைமை தாங்கினார். ராமலிங்கம் வரவேற்றார். இளங்கோவன் துவக்க உரையாற்றினார். சத்தியநாராயணன் இறைவழிபாடு நடத்தினார்.
சற்குருநாதன், சுரேஷ், மாதேஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடத்தினர். சுப்ரமணியம் ஓதுவாமூர்த்தி, குருக்கள் நாகராஜ், பாலசுப்ரமணியம், மணிகண்டன் ஆகியோரின் சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில், நிர்வாகிகள் சந்திரசேகர், மாசிலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.