ADDED : செப் 18, 2025 03:10 AM

கடலுார்: பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் ஆர்.கே.,அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் திருவிழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் தலைமை தாங்கனார். உதவி தலைமை ஆசிரியை பரமேஸ்வரி வரவேற்றார். மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், முற்றோதல் மற்றும் திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் மல்லிகா, ஜெயா போட்டிகளை நடத்தினர். உலக திருக்குறள் பேரவையில் கடலுார் மாவட்ட தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.