ADDED : மே 17, 2025 12:36 AM

நடுவீரப்பட்டு: நெல்லிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
நெல்லிக்குப்பம் மழுவேந்திய விநாயகர் கோவிலில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நேற்று 10ம் ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் அர்ச்சுனன், திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை கரகத் திருவிழா, சுவாமி வீதியுலா நடந்தது.
நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது.