/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி
போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி
போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி
போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி
ADDED : மார் 25, 2025 06:51 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கோடை வெயிலை தாங்கும் வகையில் தெர்மாகோல் தொப்பி வழங்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கம் துவங்கிய நிலையில், சிதம்பரம் போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெயிலை தணிக்கும் வகையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது.
சிதம்பரம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், டி.எஸ்.பி., லாமேக், போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, பழச்சாறு, தர்பூசணி வழங்கினார்.
தொடர்ந்து, காலை, மாலை, இரு வேளைகளிலும் தினமும் மோர் மற்றும் பழச்சாறு கொடுக்கப்படும் என, தெரிவித்தார். நிகழ்ச்சியில் சிதம்பரம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.